செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரிக்க செய்யவேண்டியது என்ன...?

எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படும் இரத்த வெள்ளையணுக்களின் முக்கிய பணியே நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவளித்து, பாக்டீரியாக்கள் மற்றும் இதர நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவது தான். 

ஒருவரது உடலில் இரத்த வெள்ளையணுக்களானது ஒரு மைக்ரோலிட்டர் இரத்தத்தில் சராசரியாக 4,500 முதல் 10,000 வரை இருக்கும். எப்போது இந்த அளவுக்கு  குறைவாக இரத்த வெள்ளையணுக்கள் உள்ளதோ, அப்போது அடிக்கடி உடல்நல குறைவால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடும்.
 
ஒருவர் அடிக்கடி நோய்வாய்ப்பட நேர்ந்தால், உடலின் இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரிக்க முயல வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் குறிப்பிட்ட உணவுகளை உண்பது தான்.
 
சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கிரேப்ஃபுரூட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். இதனால் இரத்த வெள்ளையணுக்களின் அளவு அதிகரிக்கும்.
 
பசலைக்கீரையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதுடன், ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன்களும் அடங்கியுள்ளது. இது கிருமிகளை  எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரிக்கும்.
 
அன்றாட உணவில் யார் ஒருவர் தயிரை சேர்த்து வருகிறாரோ, அவரது உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள வளமான  அளவிலான வைட்டமின் டி தான் காரணம். இந்த வைட்டமின் டி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும்  வெள்ளையணுக்களின் அளவை ஊக்குவிக்கும்.
 
பாதாமை ஒருவர் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், இரத்த வெள்ளையணுக்களின் அளவு அதிகரித்து, உடலைத் தாக்கும் நோய்களின் தாக்கம் குறையும்.
 
க்ரீன் டீயில் உள்ள வளமான அளவிலான அமினோ அமிலம் எல்-தியனைன், கிருமிகளை எதிர்த்துப் போராடும் வெள்ளையணுக்களின் உற்பத்திக்கு உதவும்.
 
பப்பாளியில் பொட்டாசியம், பி வைட்டமின்கள், ஃபோலேட் போன்ற ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்களும் உள்ளது.
 
பப்பாளியைப் போன்றே கிவி பழத்தில் ஏராளமான அளவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி  போன்றவைகள் உள்ளது. இந்த வைட்டமின் சி கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் அளவை மேம்படுத்துவதோடு, உடலின் முறையான  செயல்பாட்டிற்கும் உதவும்.