1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (15:18 IST)

இரத்தத்தை சுத்தப்படுத்த உணவில் எந்த வகையான பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்...?

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.


தக்காளி தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகும். அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுப்போட்டால் போதும்.

இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள் கேரட்டும் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. அதற்கு இதனை பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்ளலாம்.

காலிஃப்ளவர் போன்றே பச்சை நிறத்தில் இருக்கும் பிராக்கோலியில், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. அதோடு இதில் சல்போராபேன் என்னும் பைட்டோகெமிக்கலும் உள்ளது. இது கல்லீரல் நொதிகளைத் தூண்டி, இரத்தத்தை சுத்தம் செய்து, கார்சினோஜென்களை வெளியேற்றும்.

இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் நலத்துடன் இருக்க தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெதுவெதுப்பான நீரை ஒரு தாமிர பாத்திரத்தில் வைத்து விட்டு. காலையில் எழுந்தவுடன் அந்த நீரை பருகுவதால் இரத்தம் சுத்தம் செய்ய படுகிறது. தாமிரம், கல்லீரலை குளிர்ச்சியடைய வைக்கிறது. தண்ணீர் கழிவுகளை வெளியேற்றுகிறது.

பச்சை காய்கறிகளில் மிகவும் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சிவப்பு இரத்த அணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்க இந்த காய்கறிகளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் உதவுகின்றன.