Daily Horoscope
✕

காலிஃபிளவரில் உள்ள வைட்டமின்கள் என்ன...?

Written By Sasikala
Updated: செவ்வாய், 4 மே 2021 (11:59 IST)

மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புச்சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.
 
செரிமான கோளாறுகளை சரிசெய்யும் தன்மை இதற்கு உண்டு. காலிஃபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்துகளை  தயாரிக்கலாம்.
 
காலிஃபிளவரில் அதிகப்படியான அளவில் வைட்டமின் பி உள்ளதால் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்கப்பட வேண்டிய முக்கியமான உணவு இது.
 
காலிபிளவர் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் சக்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது.
 
காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

எல்லாம் காட்டு

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments