வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன தெரியுமா...?

தண்ணீர்: அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பதினாலும் முடி உதிரலாம். தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலை முடி உதிரல் அதிகமாகலாம்.

விட்டமின் குறைபாடு: உடலில் சரியான அளவு விட்டமின் இல்லாமையாலும் முடி உதிரலாம். நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் வைட்டமின், மினரல்  உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி (B), வைட்டமின் இ (E) மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்ள  வேண்டும்.
 
தலைமுடி சுத்தம்: தலை முடியை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வத்தைத் தடுக்கலாம். தினமும் தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்து  கொள்ளவேண்டும்.
 
பொடுகு: பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். பொடுகை போக்குவதன் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம்.
 
தூக்கமின்மை: தூக்கம் மனித உடலுக்கு மிகவும் அத்யாவசியமாகும். தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்கிறது,. நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணிநேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.
 
தலைமுடி சீவும் முறை: தலையை நாம் சீவும் முறை கூட முடி கொட்டுவதற்கு ஒரு காரணமாக அமையலாம். நீளமான முடியாய் இருந்தால் முதலில் தலையில்  சிக்கில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தலையின் உச்சந்தலையில் இருந்து தலைமுடி நுனி வரை சீப்பை வைத்து சீவ வேண்டும். இம்முறை தலையில்  இரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு உதவுகிறது.