செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முள் சீத்தாப் பழத்தில் பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?

முள் சீத்தாப் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள் நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து  போன்றவை அடங்கியுள்ளன.

புற்றுநோயால் உருவாகும் கட்டிகளை கரைத்தல், கர்பப்பை புர்றுநோய், மாரபக புற்றுநோய் என்பனவர்றை குணப்படுத்துவதுடன், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற உடலுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றலும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.
 
இரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி. உடல் நடுக்கம், இருதய கோளாறு, கிட்னி பாதிப்பு, இருமல் போன்ற பல்வேறு நோய்களையும் தீர்க்கும் உன்னதமான மருந்தாகும். இயற்கையின் கொடையாகவும் முள் சீத்தாப்பழம் உள்ளது.
 
முள் சீத்தாவில் அதிகப்படியான பொட்டாசியம் உள்ளது. இது இதய நோய் பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கும். உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்கி  இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்கும்.
 
தினமும் முள் சீத்தா டீயை பருகி வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். இதில் உள்ள இரும்பு சத்து இரத்த நலன்களுக்கு அதிக வலுவை தருகிறது. நீரிழிவு நோயினால்  அவதிப்படுகின்றவர்களுக்கு முள் சீத்தா ஓர் அற்புத தீர்வை கொடுக்கிறது. சர்க்கரையின் அளவை இது அதிகரிக்காமல் உடலை சீராக வைக்கிறது.
 
தேவையற்ற உணவுகளை அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவதால் இன்று பலர் அவதிப்படும் மிக மோசமான நிலைதான் இந்த மலசிக்கல் நோய். இதற்கு முள் சீத்தா இலைகள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது.
 
முள் சீத்தாப்பழங்களில் அடங்கியுள்ள புற்றுநோய் எதிர்ப்பு வேதிப்பொருள் புற்று நோய் செல்களை மட்டுமே அழிக்கும். ஆரோக்கியமான செல்களுக்கு எவ்விதமான  ஆபத்தினையும் இப்பழங்கள் ஏற்படுத்துவதில்லை.
 
முள் சீத்தாப்பழம் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரித்து உடலினை நாட்பட்ட நோய்கள், தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.  வயிறு, நுரையீரல், மார்பு, கணையம் போன்ற புற்று நோய்களை இந்த முள் சீத்தா பழம் குணப்படுத்த வல்லவை.
 
கிட்டத்தட்ட 12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் வல்லமை இந்த முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது. முள் சீத்தா பழம் மற்றும் இலைகளை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.