புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (14:47 IST)

முகத்தை பொலிவாக்க தக்காளியை இப்படி எல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா...!!

முகத்தை பொலிவாக்க தக்காளியை இப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள்...  
 
1. பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
 
2. தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
 
3. ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பெரிய துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெறும்.
 
4. நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும்.
 
5. 3 டீஸ்பூன் தக்காளிச் சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் மில்க் கிரீம் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும். வாரம் இருமுறை இதுபோன்ற செய்து வர வேண்டும்.
 
6. 2 டீஸ்பூன் தக்காளிச் சாறு, 1 டீஸ்பூன் ஓட்மீல், 1 டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.
 
7. 1 டேபிள்ஸ்பூன் தக்காளிச் சாறுடன் 1 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர, சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.