Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளம்ஸ் பழங்களில் என்னென்ன சத்துக்கள் உள்ளது...?

Written By Sasikala
Updated: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (13:21 IST)

பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது. மேலும் ரத்ததில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
 
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பல வகையான உணவுகளை உண்ணும் போது அதனோடு பிளம்ஸ் சேர்த்து சாப்பிட்டால், உடலில் கொழுப்புகள் சேராமல் எடையை கட்டுக்கோப்புடன் வைக்க உதவுகிறது.
 
பிளம்ஸ் பழங்களில் உள்ள சத்துக்கள் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக உள்ளதால் முடி கொட்டுவதை தடுக்கிறது. மேலும் இளம் வயதில் நரை முடி பிரச்சனையை போக்குகிறது.
 
தோலில் ஏற்படும் காயங்கள், தழும்புகள் ஆகியவை குணமாக தினமும் ஒரு பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் அடிக்கடி பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை நீங்கி சிறுநீரக வேலைகள் சீராக்கி நச்சுகள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
 
கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் இப்பழத்தில் உள்ள போலிக் அமிலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கியத்தை தருகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.
 
நார்ச் சத்து தான் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் செரிமானம் செய்ய உதவுகிறது. பிளம்ஸ் பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்பு பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் செயலாற்றுகிறது.
 
இப்பழத்தில் மெக்னீசியம் சத்து உடலின் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான செயலாற்றலுக்கு உறுதுணையாக இருக்கிறது. நம் சாப்பிடும் பல வகையான பழங்களில் ஒவ்வொரு சத்துக்கள் கொண்டிருக்கும். ஆனால் பிளம்ஸ் மட்டுமே இப்படிப்பட்ட தனித்துவமான நமக்கு நன்மை தரக்கூடிய அனைத்தையும் பெற்றிருக்கும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments