செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தேவையற்ற கொழுப்பினை குறைக்க உதவும் உணவுகள் என்ன...?

தொப்பையை குறைக்கவேண்டும் என்று விரும்பினால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து பருகவேண்டும். எலுமிச்சையில் வைட்டமின் சி  அதிகம் உள்ளது. அதில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் உள்ளன. 

எலுமிச்சை நீர் செரிமானத்தை தூண்டுவதுடன், உடலிலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றுகிறது; அதிகப்படியான கொழுப்பினை எரிப்பதற்கு உதவுகிறது. எலுமிச்சை  சாற்றை மட்டும் அருந்த சிரமமாக இருந்தால் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொள்ளலாம். 
 
சீரக நீர் உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கக்கூடிய இன்னொரு நீர், சீரகம் கலந்த நீராகும். அது செரிமானத்தை தூண்டுவதுடன் அடிவயிற்று சதையை  கரைக்கவும் உதவுகிறது. ஆகவே, எலுமிச்சை சாற்றுக்கு பதிலாக சீரக நீரையும் காலையில் பருகலாம்.
 
முட்டை, பால், மீன் போன்றவற்றில் புரதம் அதிகம் உள்ளது. முழு தானியம் அரவை இயந்திரத்தில் அரைக்கப்படாத, தீட்டப்படாத தானியங்களில் அதிக அளவு  நார்ச்சத்து இருக்கும். அரிசி போன்றவை தீட்டப்படுவதால் அதில் கார்போஹைடிரேட் அதிக அளவில் உள்ளது. தீட்டப்படாத தானியங்களில் சமைக்கப்பட்ட  உணவுகளை சாப்பிட்டால் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து உடலில் சேரும். இதை சாப்பிட்டாலும் வயிறு நிறைவாக உணர முடியும். அதிக நார்ச்சத்து உணவை  தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்; வயிற்று சதையும் கரையும். 
 
மஞ்சள் தூள் உடல் பருமன் என்பது உடலில் ஏற்படும் ஒருவித அழற்சியின் விளைவுதான். இஞ்சி குடும்பத்தை சேர்ந்த மஞ்சளை உணவில் சேர்ப்பது உடல் பருமன் மற்றும் அழற்சியை குறைக்க உதவும். உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் கடைபிடிக்கும் உணவு வழக்கத்தில் மஞ்சளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  நல்ல பலன் கிடைக்கும்.
 
அதிகமான நீர் உடல் எடையை சார்ந்த தொல்லைகளை அகற்றும் பண்பு தண்ணீருக்கு உண்டு. எப்போதும் நீர்ச்சத்து உடலில் இருந்தால், அளவுக்கு அதிகமான பசி  தோன்றாது. அதிக பசி இல்லையென்றால் ஆரோக்கியமற்ற உணவு பொருள்களை சாப்பிடமாட்டோம். உணவு சாப்பிடும் முன்னர் தண்ணீர் அருந்துவது அதிகமாக  சாப்பிடுவதை தடுக்க உதவும். தொப்பையை குறைக்கும்.