புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கால்சியம் குறைபாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன...?

கால்சியம் சத்தானது உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் உறுதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. கால்சியம் சத்து குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். நம் உடலில் கல்சியத்தின் பெரும்பகுதி, எலும்புகளிலும் பற்களிலும் காணப்படுகின்றன.
வலிமையான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைக் கட்டியெழுப்புவதற்கு, கல்சியம் மற்றும் விட்டமின் டி என்பன மிக முக்கியமான  இரண்டு ஊட்டச் சத்துகளாகும். விட்டமின் டி வளரும் எலும்புகளுக்கு மிகவும் முக்கியம்.
 
கால்சியம் சத்து இழப்பு ஏற்பட்டு ஓஸ்டியோபொராசிஸ் என்ற நோய் தாக்குகிறது. இதனால் பெண்கள் அதிக மூட்டு வலி, முதுகு வலி, எலும்பு  பலமிழப்பு போன்றவை உண்டாகும்.
 
கால்சியம் சத்து குறைவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கால்சியம் உடலில் குறைவதால் இரத்த ஓட்டம் சீர்குலைகிறது. இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதயத்திற்கு சீராக இரத்தம் செல்வதில்லை.  இதனால் இதயநோய்கள் உண்டாகிறது.
 
கால்சியம் சத்து குறைவால் வயிற்றுப் பகுதியின் சுவர்கள் சிதைந்துவிடுகின்றன. இதனால் உணவில் உள்ள பொருட்களை உறிஞ்சும் தன்மை குறைகிறது. இதனால் நகங்கள் வெளுத்து, பற்கள் தேய்மானம் அடையும். பற்களில் கூச்சம், பற்சிதைவு ஏற்படும்.
 
கால்சியம் நிறைந்த பொருட்கள்:
 
பால் மற்றும் பால் பொருட்கள் கால்சியம் மிகுதியாக கொண்டிருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பால் அருந்துவது  நல்லது.
 
பச்சை காய்கறிகள், கீரைகள், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. பழங்களில் கொய்யா, பப்பாளி, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பலாப்பழம், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, ஆப்பிள், முளைகட்டிய பயறு வகைகளில் அதிக கால்சியம்  உள்ளது.
 
காலிபிளவரில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு  கால்சியம் சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம்.