1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன பலன்கள்...?

மக்காச்சோளத்தில் சரியான அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டது. உடலில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாட்டாலும் ரத்தசோகை  ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.
 

இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை பச்சையாகவோ அல்லது வேறு முறைகளிலோ சாப்பிட்டு வந்தால் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி  அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்கும்.
 
மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.
 
சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டது. இது இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் வராமல் உதவி புரிகிறது.
 
மக்காசோளம் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, உணவு செரிமானமாக  உதவி புரிகிறது.
 
சோளத்தில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. சோளத்தை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிட்டால் நார்ச்சத்து முழுமையான அளவு நமது  உடலுக்கு கிடைக்கும்.
 
சோளத்தில் இருக்கின்ற மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறது. சராசரி உடல் எடையை விட குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.