1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எள்ளை உணவில் சேர்த்து கொள்வதினால் இத்தனை பயன்களா....?

கால்சியம் குறைவால் வயசானவங்களுக்கு வர மூட்டு வலி வராமல் தடுக்கும். எலும்பு அடர்த்தி அதிகமாகி எலும்பு தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கும் ஒல்லியா இருக்கிறவங்க எள்ளு சாப்பிட்டால் குண்டாக முடியும்.

மன அழுத்தத்தை குறைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ரத்த குழாய்களை ஆரோக்கியமாக வைத்து மலத்தை இறுக்கும்.
 
வாயுவால் ஏற்படும் வலிகளையும் போக்கும் எந்த விதமான புற்று நோய் வராமல் தடுக்கும் குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து இருக்கு சரி இதை எப்படி உணவை சாப்பிடலாம்.
 
எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து உருண்டையாய் செய்து சாப்பிடலாம் இல்ல எள்ளு மிட்டாய் அடிக்கடி சாப்பிடலாம். எள்ளு வெல்லம் தேங்காய் சேர்த்து பூரணமாக செஞ்சி நீராவியில் வேகவைக்க கொழுக்கட்டையா சாப்பிடலாம். எள்ளு மிளகாய் சேர்த்து அரைத்து இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.
 
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் பால் சுரப்பை அதிகரிக்கும். 5 கிராம் அளவுக்கு தினமும் காலையில் உணவுல சேர்த்துக்கணும் மாதவிடாய் வாரத்துக்கு முன்னாடி பெண்களுக்கு உடம்பில் ஏற்படும் வயிற்று உப்புசம், மார்பகங்களில் வலி தலைவலி உடல் கனத்து போனது இதற்கு மாதவிடாய் வந்த ஒரு பெண்  எள்ளு உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.
 
வாய்ப்புண் உள்ளவர்கள்  பலம் குறைவா இருக்கறவங்க எல்லாம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் கொஞ்ச நேரம் வைத்திருந்து துப்பினாலும் போதும் இந்த பிரச்சனையெல்லாம் தீரும்.  சர்க்கரை நோய் உள்ளவர்கள் எள்ளு கலந்த உணவை சாப்பிட்டால் சர்க்கரை குறைக்கும்.