ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified செவ்வாய், 10 மே 2022 (14:59 IST)

அடிக்கடி உணவில் கொண்டைக்கடலையை சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...?

Chickpeas
கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊறவைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கி ஆண்மை அதிகரிக்கும்.


கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருமுறை உட்கொண்டு வந்தால் வயிற்று பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

எலும்புகளின் உறுதிக்கு வைட்டமின், தாதுக்கள், கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே போன்றவை தேவை. இவை அனைத்தும் கொண்டைக்கடலையில் அபரிமிதமாக உள்ளது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கொண்டைகடலையை  அதிகம் சேர்த்து கொள்ளலாம்.  

கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் ஆகும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படாது. கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் கொண்டைக்கடலை உதவும்.

கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  உங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியை போக்கி நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கும்.