1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

குப்பைமேனி செடியை பயன்படுத்தி அசுத்த இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது...!

மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் இத்தகைய இரத்த மாசு நீங்கி உடல் பலம் பெற, புத்துணர்ச்சியும் எளிதில் செயல்களில் ஈடுபடும் ஆற்றல்களை அடைய, அருமையான ஒரு மூலிகை குப்பைமேனி.

 
பூனைவணங்கி என்று சொல்லப்படும் குப்பைமேனி செடிதான் அது. பெயரைக்கேட்டு, அலட்சியமாக நினைக்கவேண்டாம்.  குப்பையாகிப் போன மனிதர்களின் உடல் நலம் சீராக்க வந்ததால்தான், குப்பைமேனி என்றழைக்கப்படுகிறது.
 
அசுத்த இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது, என்று பார்ப்போம். காலையில் எழுந்ததும், ஒன்றிரண்டு குப்பைமேனி செடிகளை வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு, நன்கு அலசி அதனுடன் ஆறு அல்லது ஏழு மிளகுகள் சேர்த்து அம்மியில் நன்கு மை போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
 
இந்தக் கலவையை காலையில் அரைத்த உடனே வெறும் வயிற்றில், ஒரு நெல்லிகாய் அளவு எடுத்து விழுங்கிவிடவேண்டும்.  இப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் சாப்பிட, உடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி, உடல் வலுப்பெறும்,  இரத்தம் சீராகும். இந்தக் கலவை சற்று காரமாக இருந்தால், மிளகுக்குப் பதில் திரிகடுகப் பொடி சிறிது சேர்த்து,  உட்கொள்ளலாம்.
 
மருந்தை எடுத்துக்கொள்ளும் காலங்களிலேயே, உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணரலாம். உடலில் புது உற்சாகம் தோன்றும், உடல் தளர்ச்சி நீங்கி, புத்துணர்வு உண்டாகும். மனம் தெளிவடைந்து, ஈடுபடும் செயல்களை விரைந்து முடிக்கலாம்.  முகம் பொலிவுபெறும்.
 
குப்பைமேனி இலைகளுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூச, தோல் வியாதிகள் தீரும் மற்றும் முகப்பருக்கள் நீங்கி,முகம்  பொலிவு பெரும்.
 
பெண்கள் இந்தக்கலவையை முகத்தில் பூசிவர, முகத்தில் உள்ள உரோமங்கள் நீங்கி முகம் அழகு பெறும். காயங்கள் மற்றும்  தீப்புண்கள் ஆறும். இலைச்சாறு சளி மற்றும் நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும், மலச்சிக்கல் போக்கும்.
 
குப்பைமேனி வேர்களை நீரில் கொதிக்கவைத்து அருந்திவர, வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். இன்னும் பல எண்ணற்ற  பலன்கள் குப்பைமேனி அடங்கியுள்ளது.
 
ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைக்கணும், இந்த மருந்தை சாப்பிடும் காலங்களில், அவசியம், அசைவ உணவு,மது மற்றும்  புகை நீக்கிவிடவேண்டும்.