Daily Horoscope
✕

சரும நோய்களிடமிருந்து நம்மை காப்பாற்றும் மஞ்சள்

Written By Sasikala
Updated: புதன், 6 செப்டம்பர் 2017 (16:24 IST)
 
தேவையான பொருட்கள்: கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் - அரை ஸ்பூன், பாதாம் எண்ணெய் - 1 டீஸ்பூன், பால் - 3  டீஸ்பூன். கடலை மாவில் மஞ்சள், பாதாம் எண்ணெய் விட்டு, கடைசியில் பேஸ்ட் செய்யும் அளவிற்கு பால் சேர்த்து நன்றாக  கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 30 நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த  நீரில் கழுவ வேண்டும்.
 
இதனை இரவில் தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது. வாரம் இருமுறை செய்து பாருங்கள். முகப்பரு, கரும்புள்ளி,  தேமல் போன்ற தொற்றுக்கள் வராமல் தடுத்து சருமத்தை பாதுகாக்கும்.
 
* வேனல் கட்டிகள், பருக்கள், தேமல் இருந்தால், கஸ்தூரி மஞ்சள், சந்தனத்தை அரைத்துப் பற்று போடலாம். பாதத்தில் ஏற்படும்  வெடிப்புக்கும் விளக்கெண்ணெயுடன் மஞ்சள் சேர்த்துப் பூசினால், சட்டென சரியாகும்.
 
* கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்துக் குளித்தால், தோல் சம்பந்தமான நோய்கள்  நீங்கும். கோடைக் காலத்தில் மஞ்சள் பூசுவதால், சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.
 
* பசும் மஞ்சள் கிழங்கு, வெள்ளரிக்காயை அரைத்து எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து ஃபேஷியல் பேக் போட்டுவர, மாசு மரு  இல்லாமல் முகம் பளிச்சென மாறும்.
 
* கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றை அரைத்து, பச்சைப் பயறு மாவு கலந்து தினமும் உடலில் பூசிக்  குளித்துவர, சருமத்தில் நிறம் கூடும்.
 
* மஞ்சளைக்கூட அளவோடு பயன்படுத்துவது நல்லது. வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் அரைத்து பூசிக்  குளிப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள்.
 
* பாக்கெட்டில் விற்கப்படும் மஞ்சள் பொடியில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. பசும்  மஞ்சள் கிழங்காக வாங்கி அரைத்துக் குளிப்பது நல்லது.

எல்லாம் காட்டு

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments