உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்....!!

Body Health
Sasikala|
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முடிந்த அளவு 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. காலை, மாலை என ஒரு நேரமும்,  ஒரு மணி நேரமாவது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடல் உறுப்புகளில் நல்ல செயல்பாடு ஏற்பட்டு நரம்புகளுக்கும்,  சதைகளுக்கும் பலம் கிடைக்கும்.
பசித்தால் மட்டுமே சாப்பிட பழகிக் கொள்ளவேண்டும். நாம் தினமும் சாப்பிடும் உணவில் அளவான சாப்பாடு இருந்தால் மிகவும் நல்லது. அல்லது காலை, மாலை நன்றாக சாப்பிட்டால் இரவு உணவில் குறைந்த அளவு சாப்பாடு இருந்தால் செரிமானம் சீராக ஏற்படும்.
 
தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகளுக்கு நல்ல  செயல்பாடு ஏற்பட்டு மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு நல்ல ஆரோக்கியமும் கூடும்.
 
கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்கவேண்டும். கொழுப்பு சத்து நிறைந்த உணவை உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்பு நம் உடம்பில் ஏற்படுகின்றது. இதனால் உடல் பருமனாகி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
 
நாம் உட்கொள்ளும் உணவில் காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தானியங்கள், பயிர் வகைகளை சாப்பிடுவது நல்லது. அதிலும்  ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அசைவ உணவை இரவில் தவிர்ப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது.
Health
நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் முடிந்த அளவு மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒருமுறை உடலை பரிசோதித்துக்கொள்வது மிகவும்  நல்லது.


இதில் மேலும் படிக்கவும் :