1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 1 ஜூன் 2022 (13:58 IST)

வறண்ட சரும பிரச்சனைகளை போக்கி முகத்தில் ஈரப்பசையை தக்கவைக்க உதவும் குறிப்புகள் !!

Skin Care
பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் மிருதுவாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையை தக்கவைக்கும்.


வறண்ட சருமம் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே முகத்தில் ஈரப்பசையை தக்கவைத்து கொள்வது அவசியம்.

பசும்பால், பாசிப் பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்தூரிமஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறுவதோடு முகம் எப்போதும் ஈரப்பசையோடு காணப்படும்.

பாசிபயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால் வேர்க்குரு கொப்புளங்கள் சரியாகும். அல்லது முல்தானிமெட்டி பவுடர், பன்னீர் அல்லது வெள்ளரிக்காய் சாறு கலந்து தடவி வந்தாலும் வேர்க்குரு, கொப்புளங்கள் கட்டிகள் சரியாகும்.

வறண்ட சருமம் சரியாக, தேன், பாலுடன் குங்குமப்பூ சிறிது கலந்து முகம் உடலில் தடவி குளிப்பதால் முகம் பளபளக்கும். எண்ணெய் வழியும் சருமத்திற்கு பாலில் குங்குமப்பூ கலந்து தடவி குளிப்பதால் சரியாகும்.

சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண்ணெய் போன்றவற்றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.