புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கை மருத்துவத்தில் பெரும் பயன் அளிக்கும் துத்தி கீரை !!

துத்திக்கீரையை பொறியல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளும் குணமாகும். 

முறிந்த எலும்பை சரியாக கட்டி இலையை அரைத்து கனமாக பூசி துணியைச்சுற்றி அசையாமல் வைத்து இருந்தால் விரைவாக எலும்பு கூடி குணமாகும். குடல்புண், தொண்டை கம்மல், சொரிசிரங்குகளையும் இதன் இலை கசாயம் குணமாக்கும்.
 
நாட்பட்ட வெளி மூலம் இதத்த மூலம் உள்ளவர்கள், துத்தி இலையை ஆமனக்கு எண்ணெய்யில் வதக்கி ஒரு வெற்றிலையில் வைத்து ஆசனவாயில் வைத்து  கட்டிக்கொண்டு வர நாட்பட்ட மூல வியாதி குணமாகும்.
 
அடுத்தது துத்தி பூ. இதை நிழலில் நன்றாக உலர்த்தி பொடியாக்கி அதனுடன், பாலும் பனங்கற்கண்டும் சேர்த்து பருகிவந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய், இரத்த வாந்தி முதலியவை குணமாகும்.
 
துத்திக்காயில் உள்ள விதைகளை இடித்து பொடியாக்கி, அதனுடன் கற்கண்டும், தேனும் சேர்த்து சாப்பிட்டு வர வெண்மேகம், உடற்சூடு, கைகால்களில் படரும் சரும நோய்கள், வெள்ளை படுதல் ஆகியவையும் குணமாகும்.
 
கடைசியாக முக்கியமான விஷயம், துத்திபூவை, காம்பு, மொக்குகளோடு சேர்த்து பறித்து அதை சிறிது கருப்பட்டி சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் ஆண்மை  பெருகும்.