1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எளிதாக கிடைக்கும் இந்த கீரையில் இத்தனை சத்துக்களா...,!!

கீரை வகைகள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு பல சத்துகளை தருகிறது. ஆனால் சில கீரைகளின் மகத்துவம் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அப்படி பல பேருக்கு தெரியாமல் இருக்கும் கீரை தான் முடக்கத்தான் கீரை.

ஜலதோஷம் மற்றும் தலைவலியின் போது முடக்கத்தான் இலைகளை நன்கு கசக்கி, வெண்ணீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி மற்றும் ஜலதோஷம் நீங்கும்.
 
சிலருக்கு தலையில் பொடுகு வருவதினால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்பிரச்சனைகள் வராமல் இருக்க முடக்கத்தான் இலைகளினால் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணையை தலையில் தடவி வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.
 
முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் உடலில் இருக்கும் வாதத் தன்மை குறையும், உடலிலுள்ள அனைத்து மூட்டுகளின் வலியை போக்கும். மேலும் முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணெயில் நனைத்து அனைத்து மூட்டு பகுதிகளிலும் தேய்த்தால் மூட்டு வலி குணமாகும்.
 
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் நல்ல மருந்தாக இருந்து வருகிறது. முடக்கத்தான் கீரையை நன்கு அரைத்து குழந்தை பெற்ற பெண்கள் அடிவயிறில் பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.
 
தோல் வியாதிகளுக்கு முடக்கத்தான் கீரை நல்ல மருந்தாக இருந்து வருகிறது. மேலும் சொறி, சிரங்கு போன்ற வியாதிகள் இருந்தால் முடக்கத்தான் கீரையை அரைத்து உடம்பில் தேய்த்தால் சில நாட்களில் சொறி, சிரங்கு போன்ற நோய்கள் குணமாகும்.