முழு செடியுமே அற்புத மருத்துவ பயன்கள் கொண்ட அஸ்வகந்தா...!!
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது. வட மொழியில் அஸ்வகந்தா எனவும், தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.
அஷ்வகந்தாவிற்கு பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது. இதானால் இது யூரினல் இரைப்பை-குடல் மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்த பயன்படுத்த படுகிறது.
அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதிலுள்ள அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார் பண்புகள் மனச்சோர்வை குறைக்கிறது
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க, இந்த அஸ்வகந்தா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி இதில் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி குறைகிறது.
புற்றுநோயியலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மூலிகை இது. இதற்கு புற்று நோய் செல்களையும், புற்றுநோய் கட்டிகளையும் அழிக்கும் தன்மை உள்ளது. இது உடலை கீமோதெரபியின் பக்க விளைவுகளிலிருந்து காக்கிறது.
அஷ்வகந்தாவின் அழற்சி நீக்கும் தன்மை இதய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதய தசைகளை வலிமை படுத்துகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.