வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சருமத்தை புத்துணர்ச்சி அடைய செய்யும் இயற்கை வைத்தியம்!

10-12 துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் சந்தன பொடியை போட்டு, அத்துடன் துளசி நீரை ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.

 
வெள்ளரிக்காயை மிக்ஸியில் அடித்து அதை முகத்தில் தடவி  மணி நேரம் அல்லது 1 மணி நேரம் கழித்து முகம் கழுவினால்  முகம் பளபளப்பாக இருக்கும்.
 
புதினா இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவைகளை வெந்நீரில் கலந்து வாரத்துகு 2 முறைகள் முகத்தில் ஆவி பிடித்தால்  முகம் வசீகரமாக இருக்கும்.
 
இரவில் படுக்கும் முன்பு பாலாடையை மஞ்சள் கலந்து முகத்தில் தடவி விட்டு 1 மணி நேரம் கழித்து முகம் கழுவினால்  முகம் மிகவும் வனப்புடன் இருக்கும்.
 
கருந்துளசி இலை, கஸ்தூரி மஞ்சள் இவற்றை சேர்த்து அரைத்து உடல்முழுவதும் பூசி வெந்நீரில் குளித்து வந்தால் எவ்வித  சருமப் பிரச்சனையும் வராது.
 
ஒரு கையளவு வேப்பிலை, புதினா மற்றும் துளசி இலைகளை எடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து,  அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு உலர வைத்து,  பின் கழுவ வேண்டும். இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சி அடைத்து, முகம் பிரகாசமாக இருக்கும்.
 
ஒரு தேக்கரண்டி துளசி இலைச்சாற்றுடன், அரை தேக்கரண்டி தேன் கலந்து தினமும் முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின்  கழுவ வேண்டும்.
 
1 டீஸ்பூன் தக்காளி சாறு, 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, சில சொட்டுகள் எலுமிச்சை சாறு, பால் சிறிதுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவிட்டு கழுவ, மாசுமறுவற்ற முகத்துடன் நிறமும் முகத்திற்கு  கூடுதலாகும். சருமம் மிருதுவாக ஆக தக்காளி சாறுடன் சிறிது பீட்ரூட் சாறு எலுமிச்சை சாறு சேர்த்து தடவவும்.
 
10-12 துளசி இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றி, 3-4 நிமிடம் நன்கு கொதித்த பின் இறக்கி, குளிர வைத்து, பின்  முகத்தைக் கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம், சருமம் நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கும்.