வியாழன், 2 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிவதால் ஏற்படும் ஆபத்துகள்...!

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிவதால் இடுப்பு வலி மற்றும் பல்வேறு உடல் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஹை ஹீல்ஸ் இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற உடலியல் நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன.
ஹை ஹீல்ஸ் அணிவதனால், இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன.
 
எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்கள், முறிவுகள் ஏற்படலாம். நரம்புகளை கிள்ளும் உணர்வால் அதிகபட்சவலி ஏற்படலாம். காலை உயர்த்திய நிலையிலேயே வைத்திருப்பது, குறுகிய கால்தசைநார் வலியை உருவாக்கலாம். இதனால் தட்டையான காலணிகளை  அணிய முடியாமல் போகலாம். முதுகெலும்பு நகர்வு, அதன் மீது அதிகபட்ச அழுத்தம் அல்லது மூட்டிணைப்பு இடம் நகர்வு போன்ற உடல்  தோற்ற பிரச்சினைகளுக்கு ஹை-ஹீல்ஸ் காரணமாக அமைகிறது.
ஹை ஹீல்ஸ் அணிவதால் பாதுக்காப்பற்ற நடையையே நடக்க வேண்டியுள்ளது. அதிக உயரமாக பாதணிகள் கொஞ்சம் சறுக்கினாலும் கீழே  விழவேண்டிய நிலைதான் ஏற்படும். எமது உடல் எடையை இந்த பாதணியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால்  கொஞ்சம் பிசகினாலும் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
 
உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இவ்வாறான பாதணிகளை அணிவதை அறவே தவிர்த்துவிடவேண்டும். இந்த பாதணிகள் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளது.