Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணற்ற பலன்களை வாரி வழங்கும் இளநீர்...!

Updated: செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (14:58 IST)
 
அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள், இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும். சிறிநீர் பெருக்கியாகவும், சிறுசீரகம்  சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
 
மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துகிறது. மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும் அதனை சீர்படுத்தும் குணம்  இளநீருக்கு உண்டு.
 
இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இருதயம் சீராக செயல்படும். இதய வால்வுகளை பலப்படுத்தும் துனமும் இளநீர் அருந்தி வந்தால் இதயநோய் ஏதும்  அணுகாது.
 
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும்.
 
இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவிகிறது. தேன் கலந்து அருந்தினால் தாது விருத்தியாகி ஆண்மை  சக்தியை பெருக்கும்.
 
இளநீர் பருக மட்டுமல்ல, வெப்பம் அதிகமாகும்போது சருமத்தில் ஏற்படும் வியர்குரு போன்றவற்றின் மீது தடவவும் நல்ல மருந்தாகும். முகத்தின் சரும  பாதுகாப்பிற்கும் இளநீர் தடவிக் கொள்வது நல்லது.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments