செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் வழிமுறைகளும்...!

பருக்கள் உடல் சூட்டினால் மற்றும் எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. பருக்கள் வருவதற்கு சருமத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது பால் பொருட்களை அதிகம் உட்கொள்வது போன்றவைகள் முக்கிய காரணங்களாகும்.
ஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில்  எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, பருக்களை அதிகம் வரவழைக்கும்.
 
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத் துளைகள் திறந்து, சருமத்  துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.
 
சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், அது சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஏனெனில் சர்க்கரை உணவுகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ்  அதிகம் இருப்பதால், அவை பருக்களை உண்டாக்கும். ஆகவே சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை அளவாக சாப்பிட்டு, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.
 
சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ்கிரீம், சாக்லெட், பாலாடை  போன்றவற்றைதவிர்ப்பது நல்லது. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை எடுத்து கொள்வது அவசியம் ஆகும். தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர்  குடிப்பதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வதும் அவசியம் ஆகும். முக்கியமாக பருக்களை கிள்ளுவதோ, அதனுள் இருக்கும் பொருளை வெளியேற்ற  அழுத்துவதோ கூடாது.