1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலின் உள்சூட்டை தணிக்கும் அகத்தி கீரை

உடலின் உள்சூட்டை தணிக்கும் அகத்தி கீரை

அகத்தி கீரையின் இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.


 
 
இது மருந்து முறிவு கீரையாகும். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
1. கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.
 
2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கி குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல், அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.
 
3. இலைச்சாறும் நெல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.
 
4. அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் பயன்படுகிறது. அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
 
5. அகத்தி கீரையை அடிக்கடி உணவில் எடுத்து கொண்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். அதோடு வயிற்று பூச்சிகள் ஒழியும்.
 
6. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும்.