ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நுரையீரலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்ற சிறந்த நாயுருவி மூலிகை !!

நாயுருவியில் சிகப்பு வண்ணத்தில் செடிகளின் தண்டுகள் காணப்படுவதை பெண்பால் என்றும், அதையே உயரிய மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். மனிதனின் உடல் வியாதிகள் மட்டுமல்ல மன வியாதிகளுக்கும் மருந்தாகிறது.

பற்களை பிடுங்கவேண்டிய கடும் பல்வலிக்கு, செந்நாயுருவி வேரை, பாறை உப்புடன் சேர்த்து பல்துலக்கிவர, பல் வலிகள் விரைவில் நீங்கிவிடும். சிறுநீரக பாதிப்புகளை செவ்வனே சரிசெய்யும் செந்நாயுருவி.
 
இளம் செந்நாயுருவி செடி இலைகளை சாறெடுத்து, நீரில் கலந்து சூடாக்கி தினமும் இருவேளை பருகிவர, சிறுநீரக பாதிப்புகள் யாவும் சீராகி, சிறுநீர் இயல்பாக  பிரியும். சிறுநீரக கட்டிகள் மற்றும் சிறுநீரக கற்கள் போன்றவை நீங்கும். மேலும் மாதவிலக்கு கோளாறுகள், உடலில் அதிக நீர் கோர்ப்பது போன்றவை, சரியாகும்.
 
செந்நாயுருவி வேரை, நல்லெண்ணையில் இட்டு, தைலம் போல நன்கு சுண்டியபின் சேகரித்துவைத்துக்கொண்டு, மூக்கில் சில துளிகள் விட்டுவர, தீராத தலைவலிகள் விரைவில் நீங்கிவிடும்.
 
மலச்சிக்கல் வியாதிகள் தீர : நீண்ட நாட்களாக மலச்சிக்கல்களால் அல்லல்பட்டு வருபவர்கள், செந்நாயுருவி இலைகளை நீரில் நன்கு கொதிக்கவைத்து, குடிநீராக  பருகிவர, எத்தகைய நாள்பட்ட மலச்சிக்கலும் நீங்கி, உடனே பேதியாகி வெளியேறும்.
 
செந்நாயுருவி இலைகளை வாரமொருமுறை, சமையலில் கூட்டு போலவோ அல்லது கடைந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டுவர, இருமல் குறைந்து, நுரையீரலில்  தேங்கியுள்ள சளி, உடலில் இருந்து வெளியேறும்.