1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்திற்கு அற்புத பங்காற்றும் பலாப்பழத்தின் பயன்கள் !!

பலாப்பழத்தில் வைட்டமின் சி-யுடன், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான லிக்னைன்கள், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சாப்போனின்கள் அதிக அளவில் உள்ளன.

வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை. எனவே ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு ஒரு நல்ல  நோய் எதிர்ப்பு சக்தியானது கிடைக்கும்.
 
இப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, மாரடைப்பு வருவதை தடுக்கும்.
 
கால்சியம் சத்தை உடலில் உறிஞ்சுவதற்கு தேவையான மெக்னீசியம், பலாப்பழத்தில் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகளில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல், எலும்புகள் வலுவோடு இருக்கும்.
 
பலாப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்து, இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.
 
தைராய்டு சுரப்பியை சீராக இயக்குவதற்கு காப்பர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டால்,  தைராய்டை சீராக வைக்கலாம்.
 
பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-அல்சர் பொருள், அல்சர் மற்றும் செரிமான பிரச்சனையை போக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை சரிசெய்யும்.
 
பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ என்னும் சக்தி வாய்ந்த சத்து கண்கள் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. குறிப்பாக பார்வைக்  கோளாறு, மாலைக் கண் நோய் உள்ளவர்களுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.
 
இதில் உள்ள இனிப்பைத் தரக்கூடிய ஃபுருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ், சுவையை மட்டுமின்றி, உடலில் எனர்ஜியையும் அதிகரிக்கிறது. மேலும் இதில் கொழுப்பு  எதுவும் இல்லாததால், இது ஒரு ஆரோக்கியமான பழங்களுள் ஒன்றாக உள்ளது.