1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும் ஊறவைத்த அத்திப்பழம் !!

அத்திப்பழத்தில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிரம்பியுள்ளது. இதனை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

அத்திப்பழத்தில் இயற்கையாகவே மலமிளக்கும் பண்புகள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
விட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ளதால், உடலினுள் சென்றதும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட ஆரம்பிக்கும். இதானால் ரத்த ஓட்டம் சீரடைந்து இதய நோய் வரவிடாமல் தடுக்கும்.
 
பாஸ்பரஸ், விட்டமின் டி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் எலும்புகளை வலிமைப்படுத்தும். இதனை இரவில் படுக்கும் போது நீரில் 2-3 துண்டுகள் அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து தொடர்ந்து உண்டு வந்தால் பலனடையலாம்.
 
அத்திப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஏராளமாக நிறைந்திருப்பதால், இதனை உட்கொள்ள இன்சுலின் வெளியீட்டின் அளவு நடுநிலைப்படுத்தபடுவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
 
தினமும் சாப்பிட்டு வர இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு, கண்பார்வைக்கு, தொண்டை புண்ணிற்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
 
தற்போது பெண்களிடையே மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகம் உள்ளது. குறிப்பாக மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்ட பெண்கள் தான் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அத்தருணத்தில் பெண்கள் நீரில் ஊற வைத்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் புற்றுநோயின் அபாயமும் குறையும்.