சிறுநீரக கற்களை கரைத்திடும் முள்ளங்கி சாறு...!

Updated: சனி, 12 மே 2018 (13:30 IST)
 
நல்ல குரல் வளம் பெற முள்ளங்கி பெரிதும் பயன்படுகிறது. முள்ளங்கி சாரெடுத்து இளம் சூட்டில் காலையில் குடித்து வர குரல்  வளம் பெறும். தெளிவான  பேச்சு வரும். தொண்டை தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கிறது. முள்ளங்கி விலை மலிவாக கிடைக்கும் ஒரு காய்கறியாகும். இதன் பயன்களை  குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அதை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமையாகும்.
முள்ளங்கி சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட் நன்றாக செரிமானம் ஆகிறது. முள்ளங்கி மூல வியாதியின் அறிகுறிகளை விரைவில் போக்குகிறது. மேலும் இதன் சாற்றை குடிப்பதால் செரிமான உறுப்புகளையும் கழிவுறுப்புகளையும் சரி செய்து மூல வியாதி குணமடைகிறது.
 
முள்ளங்கி கல்லீரலுக்கு சிறந்த நண்பன். இதில் உள்ள கந்தக சத்துக்கள் பித்தநீரை சீராக சுரக்கச் செய்யும். இதனால் கொழுப்பு  மற்றும் மாவு சத்துக்கள் நன்றாக  ஜீரணமாகும். பித்தப்பையில் கற்களும் தோன்றாது, ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கப்படும், ரத்தத்தில் பிராணவாயுவும் அதிகமாகும்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments