மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் பூவரசு இலை !!
பூவரசு இலைகளுக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு. இதன் இலையை அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களுக்குப் பூசினால் பலன் கிடைக்கும். பூக்களை அரைத்து சிரங்குகளின்மீது பூசினாலும் குணம் கிடைக்கும்.
பூவரசு காய்களில் உள்ள மஞ்சள் நிற பால் சரும நோய்களுக்கும் எச்சில் தழும்புகளுக்கும் பூசி குணம் பெறலாம். மூட்டுகளில் வரும் வீக்கத்துக்கும்கூட இதை பற்று போடலாம். ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் பூவரசு காய்களின் சாற்றைப் பூசினால் பலன் கிடைக்கும்.
பூவரசு மரத்தில் அதன் பட்டைகளுக்கு சிறப்பான மருத்துவக்குணங்கள் உள்ளன. இதன் பட்டைகளை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தோல் நோய்களுக்குப் பூசி பலன் பெறலாம்.
பூவரசு மரப்பட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றியதும் வடிகட்டிக் குடித்தால் வயிறு கழியும். இதனால் காணாக்கடி, நஞ்சு, பெருவயிறு, வீக்கம் போன்றவை சரியாகும்.
முதிர்ந்த பட்டையை அரைத்துப் பூசுவது மற்றும் தேங்காய் எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைத்து உதட்டில் வரும் வெண்புள்ளியில் பூசினால் பிரச்சினை சரியாகும். வைட்டமின் குறைபாட்டால் வரும் இந்தப் பிரச்சினைகளை சரிசெய்ய பூவரசம் பட்டை உதவும்.
பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.