வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்துக்கள் உள்ள வேர்கடலை !!

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்துக்கள் உள்ளது.

தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும்.
 
வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது.
 
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதை விட அவித்தோ, வறுத்தோ, சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில் தான் நிறையச் சத்துக்கள் உள்ளன.
 
வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்கடலை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது.  கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.
 
வேர்கடலையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாக்கக் காரணமாகும் செல்களை அழித்துவிடுகின்றன. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. முதுமையில் ஏற்படும் ஆஸ்டியொபோராசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.
 
கசப்பேறிய வேர்க்கடலையில் அஃபலோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.