1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பப்பாளியைவிட நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ள பப்பாளி விதை !!

தேன் மற்றும் பப்பாளி விதைஇல் இருக்கும் சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது வைரஸ் காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து,  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாத்து வருகிறது.

பப்பாளி பழத்தின் விதைகள் மற்றும் தேனில் இருக்கும் எம்சைன்கள் சத்துக்களின் காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கிறது.
 
தினமும் 2 தேக்கரண்டி பப்பாளி விதையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல மருத்துவ குணங்கள் கிடைக்கிறது. பப்பாளி விதைகள்  பப்பாளியைவிட நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என நிறைய ஆய்வுகள் கூறுகின்றன.
 
பப்பாளி விதைகள் பெப்பைன் என்ற என்சைமைக் கொண்டுள்ளது. அது முழுக்க ஜீரணத்திற்கு உதவுகிறது. ஆகவே கல்லையும் ஜீரணிக்கக் கூடிய ஆற்றல் இந்த  விதைகளுக்கு உண்டு.
 
தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது பப்பாளி விதைகளை சாப்பிட்டால், வயிற்றில் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் ஏற்படாது. பப்பாளி விதைகளில் உள்ள சத்துக்கள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது.
 
குழந்தைப் பேறினை தள்ளிபோட வேண்டும் என நினைப்பவர்கள், மாத்திரை மருந்துகளுக்கு போகாமல் இந்த பப்பாளி விதைகளை உண்ணலாம். இவை  இயற்கையாகவே கருத்தரிக்க விடாமல் செயல்படும்.