மூலிகை மருத்துவத்தில் பயன்படும் செடி - நிலவேம்பு
சமீபத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், தமிழக அரசால் நிலவேம்புக்(Andrographis paniculata) குடிநீர் டெங்குவிற்கு எதிரான தடுப்பு மருந்தாக அங்கீகரிக்கபட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மறுத்துவமனைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் இலையும் தண்டும் மருத்துவ குணமுடையவையாகும். இச்செடி இரண்டு முதல் மூன்று அடி வரை நிமிர்ந்து வளர்கிறது. இதன் கக்கத்திலிருந்து உருவாகும் பூக்கம் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும்.
நிலவேம்புக் குடிநீர் உட்கொள்ள சுரம், நீர்க்கோவை, வயிற்றுப் பொருமல், குளிர்காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.
மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் நல்லது. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது.
இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
இதன் இலையை அரைத்து பாலுடன் கலந்து காலையில் உட்கொள்ள உடல் வலுவாகும். பாம்புக் கடிக்கு இதன் இலையின் க அரைத்து கொடுக்க நஞ்சு நீங்கும்.
குழந்தைக்கு காய்ச்சல் சரியாக நிலவேம்பு, திப்பிலி, சுக்கு, சீந்தில் கொடி ஓர் நீறை அளவு எடுத்து ஒரு குவளைக்கு அரை குவளையாக வற்ற வைத்து கசாயம் செய்து கொடுக்க குணமாகும்.