1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்பம் பூ...!!

வேப்பம்பூவை பச்சையாகவோ அல்லது சர்பத் தயாரித்து சாப்பிடலாம். வேப்பம் பூவை துவையலாகவோ அல்லது பொடி செய்தோ பயன்படுத்தலாம்.  குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் செய்து கொடுத்தால் வயிறு சுத்தமாகும்.

வேப்ப மரத்திலிருந்து கிடைக்கும் இந்தப் பூவில் சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது ஒரு கிருமிநாசினி இதனுடைய காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். இதனுடைய குச்சி, இலை, துளிர், பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது.
 
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.
 
வேப்பம் பூவை காய வைத்து லேசாக வறுத்து பொடி செய்து, பருப்பு பொடியுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது/ வேப்பம்பூவை சாதத்தில் போட்டு  சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் போன்ற பிரச்சனைகளை நீக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றிலுள்ள கிருமிகள் அழியும்.
 
வேப்பம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வெயில் காலங்களில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க உடல் பித்தம் தீரும்.