திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பொடுகு தொல்லையை முற்றிலுமாக நீக்கும் இயற்கை குறிப்புகள்....!!

சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம். சின்ன வெங்காயத்தை கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து,  15  நிமிடம் கழித்து குளித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை விரைவில் நீங்கும். பசலை கீரையை அரைத்து  தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது
 
வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும். அருகம்புல் சாறு எடுத்து தேங்காய்  எண்ணெய்யுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்
 
வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தேய்கலாம்.

தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள  சாம்பை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
 
தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம். பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும். மேலும் தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
 
மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து, இந்த கலவையை தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.