Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை முறையிலான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்....!

Updated: செவ்வாய், 27 நவம்பர் 2018 (11:13 IST)
 
உடல் பருமனை குறைக்க இரவு ஒரு டீஸ்பூன் ஓமத்தை ஊரவைத்து, ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் உடல் பருமன்  குறைய ஆரம்பிக்கும்.
 
பொடித்த படிகாரத்தை கொண்டு வாரம் மூன்றுமுறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு  பல் ஈறுக்கு நன்கு வலு கொடுக்கும்.
 
வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி  நீங்கும்.


 
சீயக்காய் அரைக்கும்போது வேப்பிலையையும் கடுக்காயையும் போட்டு அரைத்து தலைகுளிக்க உபயோகித்தால் பேன் தொல்லை இருக்காது.
 
வெங்காயத்தை நன்கு ஊறவைத்து அரைத்து தலை முடியின் வேர்க்கால்களில் தடவி வைத்திருந்து நன்கு ஊறியபின் தலைமுடியை  அலசினால் முடி நன்கு வளர்வதுடன், கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
 
தலைமுடி பளபளப்புடன் இருக்க முட்டையின் வெள்ளைக் கருவில் ஒரு முழு எலுமிச்சம்பழ ஜூஸை மட்டும் பிழிந்து தலைக்குத் தடவி பத்து நிமிடம் ஊறியபின் ரெகுலராக உபயோகிக்கும் ஷாம்பு போட்டு குளித்தால், நம் தலைமுடி பளபளப்பாக மாறும்.
 
உருளைக்கிழங்கு பொறியல் செய்யும் போது சீரகத்துடன் கொஞ்சம் ஓமத்தையும் சேர்த்து சமைத்தால் வீடே மணக்கும். எளிதில் செரிக்கும்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments