வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் நந்தியா வட்டை வேர் !!

நந்தியா வட்டை மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் பூவும் இலையும் மருத்துவக் குணங்கள் உடையன. இதன் வேர், பூக்கள், மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தவை.

வேர் கசப்பான சுவைகொண்டது. சிறிது துவர்ப்புச் சுவையும் இதிலுண்டு. உடல் சூட்டைக் கிளப்பி சீராக்கும், வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். பல் வியாதியிலும், மங்கலாக பார்வை உள்ளவர்களுக்கும் சிறந்தது வேர். 
 
பக்கவாதம், சிறுநீர்க் குழாயில் ஏற்படும் சுருக்கம், வாயு தோஷத்தின் சீற்றம், பூட்டுகளில் ஏற்படும் வலி போன்றவைகளில் வேர் சிறந்தது. வேரின் தோல் துவர்பபு கசப்புச்சுவை உடையது. வெந்நீர் விட்டரைத்து வெறும் வயிற்றில் இருவேளை நக்கிச் சாப்பிட அனாவசியமாக அடைந்து கிடக்கும் குடல் அழுக்குகளை  அகற்றிவிடும். மலத்தைக் கட்டும். 
 
கல்லீரல் மற்றும் மண்ணீரல் வியாதிகளிலும், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையையும், பூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளிலும் வேர்தோல் மிகுந்த  பயன்களை அளிக்கக் கூடியது.
 
சூடான புளித்த மோரில் வேர்த்தோலை அரைத்த பூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்களில் பற்று இடலாம். வெந்நீரில் அரைத்து உள்ளுக்கும் சாப்பிடலாம். 
 
வாய் மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களில் வெந்நீரில் அரைத்து கரைத்த வேர்த்தோலை வாய் கொப்பளிப்பதால் வாய் மற்றும் பல் உபாதைகள்  நீங்கிவிடுகின்றன.