உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்களை கொண்டுள்ள முசுமுசுக்கை மூலிகை !!
முசுமுசுக்கை கீரையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடியது.
முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் C ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக முசுமுசுக்கை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழ்கினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முசுமுசுக்கை இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இப்படி செய்தால் இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். இரத்தமும் சுத்தமடையும்.உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் முசுமுசுக்கையை எடுத்து கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
முசுமுசுக்கை சாற்றில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி காலை மாலை இரு சிட்டிகை உண்டால் இருமல் குணமாகும். முசுமுசுக்கை வாந்தியை கட்டுப்படுத்தும். சளி, இருமல், இரைப்பை நோய்கள் குணமாகும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
முசுமுசுக்கையானது நுரையீரல், சுவாசக் கோளாறு, சுவாசப்பையில் உண்டாகும் கபத்தை அகற்றும். முசுமுசுக்கை கீரையுடன் வெந்தயம் சேர்த்து உண்டால் உடல் பலம் பெறும். முசுமுசுக்கை தைலம் உடல் சூட்டை தணிக்கும். கண் எரிச்சல் போக்கும்.