வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சாதரணமாக கிடைக்கும் குப்பைமேனி இலையில் உள்ள மருத்துவகுணங்கள்...!!

குப்பைமேனி கீரை பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஒரு கீரையாகும். இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணமுடையது. 

இந்த செடி எல்லா இடங்களிலும் வளரும் இயல்புடையது. குப்பைமேனிக் கீரை, ஒருவகையான கசப்பும் கார்ப்பும் கலந்த சுவை கொண்டது. குப்பைமேனி இலையை  மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும்.
 
பல் நோய், தீப்புண், தாவர வகை நஞ்சு, வயிற்று வலி, வாதநோய்கள், மூலம், நமைச்சல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்சனைகளுக்கு  அருமருந்து.
 
குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து, ஒன்று முதல் நான்கு தேக்கரண்டி வரை சிறுவர்களுக்கு கொடுத்துவந்தால், வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து மலம் வழியாக வெளியேறும்.
 
குப்பைமேனிச் சாற்றை, பெரியவர்களுக்கு 15 மி.லி முதல் 30 மி.லி-யும், சிறுவர்களுக்கு ஒரு தேக்கரண்டி வீதமும் குடிநீராகச் செய்துகொடுக்கலாம். இதன் மூலம், வாந்தி உண்டாகி, உடல் சூடு தணிந்து, உடலில் உள்ள பித்தம் குறையும்.
 
குப்பைமேனி இலையைப் பொடி செய்து, வெள்ளைப்பூண்டு சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகள் வயிற்றில் இருக்கும் புழுக்கள், மலம் வழியாக வெளியேறும். இதனுடைய இலைப் பொடியை ஒரு கிராம் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வந்தால், இருமல் மற்றும்  கபம் நீங்கும்.
 
உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி நீங்கும். நோய்வாய்ப்பட்டு நீண்ட  நாட்களாகப் படுக்கையில் இருந்தவர்களுக்கு படுக்கை புண் வரும். அப்படி படுக்கை புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலையை உலர்த்தி பொடி செய்து புண்  இருக்கும் இடத்தில் கட்டுப்போட, புண்கள் ஆறும்.
 
மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அரைத்து துவையல் போல சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும். குப்பைமேனி இலையைப் நீரில்  கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து, அதனுடன் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.