திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கோடையில் ஏற்படும் உடல் சூட்டை தடுப்பதற்கான வழிமுறைகள்...!

கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
கோடைக்காலத்தில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைவதைக்  காணலாம்.
 
அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு வாயில் போட்டு, தண்ணீர் குடித்து விழுங்க வேண்டும். இப்படி  தினமும் கோடையில் செய்து வந்தால், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.
 
உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி என்னவென்று கேட்டால், முதலில் பலருக்கும் தண்ணீர் தான் நினைவில் வரும். ஆகவே ஒரு அகன்ற பாத்திரத்தில்  குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள அதிகமான வெப்பம் வெளியேறும். மேலும்  குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.
தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுங்கள். மற்றும் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது உங்களது உடல் சூட்டை தணிக்க உதவும்.