1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி !!

மணத்தக்காளியை மிளகு தக்காளி என வேறு பெயரிலும் சொல்வதுண்டு. இதில் கருப்பு சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இலை, காய், பழம் என அனைத்தும்  மருத்துவ பயனுடையது. 

இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், கணை சூடு, இருமல் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. மணத்தக்காளி வற்றலை நெய்யில் வறுத்து சாப்பிட நீர்க்கடுப்பு,  உட்சூடு ஆகியவை குணமாகும்.
 
மணத்தக்காளி கீரை இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மணத்தக்காளியை வாரம் இருமுறை அதிக காரம், புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
 
மணத்தக்காளி கீரையை நன்றாக மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும். சிவப்பு மணத்தக்காளி உடல் சோர்வு, வாய்வு கோளாறை நீக்கும். மணத்தக்காளி கீரைக்கு  குரலை இனிமையாக்கும் குணம் உண்டு. மணத்தக்காளி கீரை கருப்பையில் வளரும் கரு வலிமை பெற உதவுகிறது.
 
மணத்தக்காளி கீரையானது இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து  நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.
 
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது மணத்தக்காளி. மணத்தக்காளியின் வேரானது மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில்  சேர்க்கப்படுகிறது.
 
கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.