Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயன்தரும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!

Written By Sasikala
Updated: திங்கள், 21 டிசம்பர் 2020 (10:24 IST)

பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்படும் குறைபாட்டினை நீக்கும். தவிர பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்கிறது. சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள் பெண்களீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது.
 
பெண்களின் வயிற்று சதை குறைய: சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை  என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
 
தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன்  குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.
 
குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெய்யில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்.
 
காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்..
 
இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.பேன் பொடுகு  அகலும்.
 
சோயாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது. இது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் போன்றவைகளை குறைக்கிறது.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments