புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலுக்கு தேவையான ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ள கொத்தவரங்காய் !!

கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக புரதம், வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியையும், மற்றும் இரும்புச்சத்து நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கொத்தவரங்காய் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ உங்கள் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
 
கொத்தவரங்காய் சாப்பிட்டுவர எலும்பு மற்றும் பல்லானது உறுதிப்படும் .பித்தமயக்கம் ஏற்படுவதை தடுக்கும் மாலைக்கண் நோயை குணப்படுத்தும். கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
 
கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது. மேலும், நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு கொத்தவரங்காய் ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.
 
கொத்தவரங்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உங்களை வயிற்று புண்களில் இருந்து பாதுகாக்க உதவும். வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை இது அதிகப்படுத்தும்.