பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அற்புத மூலிகை கீழாநெல்லி !!
கீழாநெல்லி மிகுந்த குளிர்ச்சி தன்மை கொண்டதாகும். இது இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்புச் சுவைகளைக் கொண்டது. கபத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும். இதனை பச்சையாகக் கூட சாப்பிடலாம்.
மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே. இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு. கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலையில் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடிகள் உருவாகும்.
கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும்.
நீர் சுருக்கு நோயினால் அவதிப்படுபவர்கள் கீழா நெல்லி இலையுடன் சீனாக் கற்கண்டு சேர்த்து மைப் போல அரைத்து இருவேளைகள் என 1 வாரம் சாப்பிட்டால் உடனே சரியாகி விடும்.
கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.
பல் கூச்சம் இருந்தால் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் போதும். உடனே பல் கூச்சம் போய்விடும். சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.