புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவம் மற்றும் அழகு பராமரிப்பில் உதவும் கஸ்தூரி மஞ்சள் !!

கஸ்தூரி மஞ்சள் மலைப் பகுதிகளில் இயல்பாக வளர்ந்தாலும் இதன் மருத்துவ மற்றும் வாசனை பண்புக்காக பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. செடியின் கிழங்குகள் காய வைக்கப்பட்டு மணமுள்ள கஸ்தூரி மஞ்சளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன.

கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய, சில நிமிடங்களில் தலைவலி காணாமல் போகும்.
 
மிளகு, கடுக்காய் தோல், வேம்பு விதை, கஸ்தூரி மஞ்சள் கலந்து செய்யப்படும், ‘பஞ்சகற்பம்’ என்ற குளியல் பொடியை வாங்கிப் பயன்படுத்தலாம். சரும பிரச்சனை ஏற்படாது. கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். 
 
கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வலியும் வீக்கமும் குறையும்.
 
கஸ்தூரி மஞ்சளுடன் பாசிப்பயறு, கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, ரோஜா இதழ், செண்பகப்பூ, வெட்டிவேர், விளா மரத்தின் வேர், சந்தனம் கலந்து, பொடி செய்து, தினமும் தேய்த்துக் குளித்துவந்தால், தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவை நீங்கும்.
 
தோல் மென்மை ஆகும். முகப்பருக்கள், வியர்வைக் கட்டிகள் மறையும். அழகுடன் ஆரோக்கியமும் தரும் கஸ்தூரி மஞ்சள். 
 
தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.
 
கஸ்தூரி மஞ்சள் பொடியை, தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்று வலி தீரும். பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும், நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும்.