1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் கண்டங்கத்திரி செடி !!

கண்டங்கத்திரி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவை. இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற அனைத்தும் சித்தா ஆயுர்வேத மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது.

மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களில் மிகவும் முக்கியமானது சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள்தான். இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டை கட்டு, சுரம் என்று பற்பல கப நோய்கள் பாதிக்கின்றன. இவை அனைத்திற்கும் மூலிகை மருந்துகள் உடனடி நிவாரணம் அளிக்கின்றன.
 
பக்க விளைவுகள் இல்லாமலும், அதே நேரம் உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய மூலிகைகளில் முக்கியமான மூலிகை கண்டங்கத்திரி. பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகை செடிகள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை.
 
ஆஸ்துமா குணமாக கண்டங்கத்திரி இசங்கு, ஆடாதோடை, தூதுவளை, துளசி, வால் மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் ஒவ்வொன்றையும் இருபத்து ஐந்து கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 
கண்டங்கத்திரியின் முழு தாவரத்தையும் சேகரித்து வைத்து கொள்ளவும். அதனை நன்றாக உலர வைத்து தூள் செய்து வைத்து கொள்ளவும். அரை தேக்கரண்டி தூளுடன் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து, உள்ளுக்கு சாப்பிட தொண்டைச் சளி குணமாகும்.
 
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலை வலி, கீழ்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும்.
 
காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்த சாற்றுடன் ஆல விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர மறையும்.