Daily Horoscope
✕

கொய்யாப் பழம் சாப்பிடுவது நல்லது எதற்காக தெரியுமா...?

Updated: சனி, 1 செப்டம்பர் 2018 (13:42 IST)
 
கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி 9’ அல்லது போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப்  பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
 
குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப் பாதுகாக்கிறது.
 
கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. இவை கண்பார்வைத் திறனை  மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத் திறனையும் அதிகரிக்கிறது.
 
கொய்யாவானது அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.
 
கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே  நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments