ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வீட்டிலேயே தயாரிக்கலாம் பொடுகை விரட்டும் மூலிகை எண்ணெய்....!

கடுமையான முடி உதிர்வு, ஆங்காங்கே சொட்டை, பொடுகுத் தொல்லை இது போன்ற பிரச்சனைகளுக்கு, இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு உதவும். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை: செம்பருத்தி பூ - 5 இதழ்கள், செம்பருத்தி இலை - 5, தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
 
செய்முறை: தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி இதழ்களையும் இலைகளையும் கழுவி, ஈரமில்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள். நீர் விடக் கூடாது. நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெய்யை அடுப்பில் சூடுபடுத்தி அதில், செம்பருத்தி பேஸ்ட்டை அதில் போடவும். 1 ஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்க்கவும். நுரை அடங்கியதும் இறக்கி ஆற விடுங்கள். பின்னர் வடிகட்டி இந்த எண்ணைய்யை பாட்டிலில் சேகரித்து வைத்துப் பயன்படுத்தலாம். இதனை தினமும் உபயோக்கிக்கலாம். முடியின்  வேர்கால்களை தூண்டும்படி ஸ்கால்ப்பில் 1 ஸ்பூன் அளவு தேய்த்து வாருங்கள். முடியின் வேர்ப்பகுதியில் மட்டும் தடவுவதால் பிசுபிசுப்பு இருக்காது.

உடல் சூட்டைத் தணித்து முகம் பளிச்சிட வேண்டுமா...? அப்படியென்றால் கிர்ணிப்பழம் சாப்பிடுங்க....!

இவ்வாறு செய்து வந்தால், வேர்கால்கள் வலுப்பெற்று, மிருதுவான, மின்னும் கூந்தல் கிடைக்கும். கூந்தல் உதிர்வது நின்று விடும். பொடுகையும் விரட்டலாம்.