Daily Horoscope
✕

புரோக்கோலி குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது உண்மையா...?

Updated: சனி, 12 ஜனவரி 2019 (15:48 IST)
 
புற்று நோய்க்குச் சமமாக இன்றையச் சூழலில் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய் மாரடைப்பு. புரோக்கோலியில் உள்ள  பிகாம்ப்ளக்ஸும் எனும் வைட்டமின் எ, சி, ஈ, ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயிலிருந்தும் இதயத்தைக் காக்கிறது. உடனடி மாரடைப்பு  வராமலும் தடுக்கிறது.
 
தைராய்டு எனப்படும் முன்கழுத்துக் கழலைக்கு புரோக்கோலி மிகச்சிறந்த மருந்தாகும். இதனைப் பச்சையாக சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பியின் செயற்பாடு கட்டுக்குள் இருக்கும்.
 
பிரசவகாலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவை கால்சியம் நிறைந்த உணவுகள். புரோக்கோலி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான  கால்சியத்தை அளிக்கக்கூடியது. இதை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கு உதவும்.
 
இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு. பத்து கலோரி புரோக்கோலியில் சுமார் 1கிராம் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணசக்தியை அதிகரிக்கும் நற்பணியைச் செய்யும்.
 
அதுமட்டுமல்ல ப்ரோக்கோளியைப் பச்சையாகப் பயன்படுத்துவதால் வயிற்றில் தேவையற்று வளரும் சில தசைகளின் வளர்ச்சியைக்  குறைக்கிறது.
 
இளசான புரோக்கோலி புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிடம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கிறது என சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி புரோக்கோலிக்கு  உண்டு.
 
புரோக்கோலியில் இருக்கும் நார்ச்சத்து உடலின் செரிமான சக்திக்கு உதவும். இதைச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியம் மேம்படும்; செரிமானம்  சீராகும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments