1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முந்திரி பருப்பை தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா...?

முந்திரி பருப்பில் உள்ள கொழுப்புக்கள் விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவற்றைக் கரைத்து மூளையின் செயல்திறன் மற்றும் இரத்தம் உறைதலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களை உருவாக்குகிறது.
 

முந்திரிப்பருப்பில் மிகஅதிகமாக உள்ள காப்பர் சத்தானது இரும்புச்சத்தின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுவதோடு இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
 
இதில் உள்ள காப்பர் சத்து எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலை சீராக்கவும் உதவுகிறது. இச்சத்தானது உடலின் உள்ள நரம்புகள் மற்றும் எலும்புகளின் அமைப்பிற்கு இன்றியமையாதது.
 
முந்திரிப் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்வது பித்தப்பையில் கற்களின் உருவாக்கத்தைக் குறைக்கிறது.
 
இதனை கர்ப்பிணி பெண்கள் உண்ணும்போது, கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பாற்றலலை அதிகரிக்கச் செய்கிறது. முந்திரி பருப்பில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைப்பதோடு, அதனுடையப் பாதுகாப்பிற்கும் உதவுகிறது.