1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி !!

இன்சுலின் செடி இயற்கையாகவே சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் குணம் கொண்டதாக விளங்குகிறது. நமது தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப ஈரமான இடங்களில் நன்கு விளையக் கூடியது இந்த இன்சுலின் செடி. 

நாட்டு புறங்களில் மிகவும் இயல்பாக இன்சுலின் செடி கிடைக்கிறது. இஞ்சி, மஞ்சள் வகையைச் சேர்ந்த இந்த இன்சுலின் செடி காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர பெயரை கொண்டதாகும். நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இந்த செடியை பயன்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை தயார் செய்யலாம்.
 
இதற்கு தேவையான பொருட்கள் இன்சுலின் செடியின் இலைகள், கறிவேப்பிலை. ஒரு கொத்து இன்சுலின் இலைகள் மற்றும் ஒரு பிடி கறிவேப்பிலை ஆகியவற்றை  எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் இதை காலை, மாலை என  இரு வேளைகளிலும் பருகி வரவேண்டும். இந்த கஷாயத்தை குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது.
 
மாதவிடாயை முறைப்படுத்துகிறது. மேலும் கருப்பை நீர் கட்டிகளையும் இந்த கஷாயம் குணப்படுத்துகிறது. இன்சுலின் இலைகளை போலவே கறிவேப்பிலைக்கும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. இன்சுலின் செடியின் 2 இலைகளை சர்க்கரை நோயாளிகள் தினமும் பச்சையாக காலையில் சாப்பிட்டு வரலாம்.  இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது.
 
உடலில் ஏற்படும் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படும் போது அதற்கு மருந்தாக அமைகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடலில் நமைச்சல்  ஏற்படுகிறது. சர்க்கரை உடல் உறுப்புகளை சிறிது சிறிதாக பாதிக்கும் இயல்பு கொண்டது. முதலில் கண்களை பாதிக்கும். பின்னர் நரம்புகளை பாதிக்கும். எனவே  சர்க்கரை நோய்க்கு இந்த இன்சுலின் இலைகள் சிறந்த மருந்தாகிறது. இன்சுலின் இலைகளை பயன்படுத்தி முகத்தில் ஏற்படக் கூடிய பருக்கள், கரும்புள்ளிகள்  உள்ளிட்டவற்றிற்கு பயன்படக் கூடிய ஒரு வெளிப்பூச்சு மருந்தை தயார் செய்யலாம்.
 
இதற்கு தேவையான பொருட்கள்: இன்சுலின் இலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன். ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் சம அளவு இன்சுலின் இலைச் சாறை சேர்க்க வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலக்கி முகப்பரு, கரும்புள்ளிகள் ஆகிய இடங்களில் தடவி வர வேண்டும்.  இதன் மூலம் அவற்றின் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.